ஹாங்காங்: சவூதி அரேபியாவை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 2026 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றள்ளது.
சவூதி அரேபியாவை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அப்பிரிவில் ஜப்பான் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
சவூதி அரேபியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அது தகுதிச் சுற்றின் நான்காவது சுற்றில் விளையாடும்.
உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பிடிக்க அச்சுற்றில் இந்தோனீசியா, கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஈராக், ஓமான் ஆகிய நாடுகள் களமிறங்கும்.
ஜோர்தானில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் ஓமானும் பாலஸ்தீனும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டம் முடியும் கட்டத்தில் ஓமானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை கோலாக்கினார் ஓமானின்ன இசாம் அல் சபி.
மற்றோர் ஆட்டத்தில் இந்தோனீசியாவை 6-0 எனும் கோல் கணக்கில் ஜப்பான் புரட்டிப்போட்டது.
பஹ்ரேனுக்கு எதிரான ஆட்டத்தை 1-0 எனும் கோல் கணக்கில் சீனா கைப்பற்றியது.
வடகொரியாவை 3-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த ஈரான் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. உலகக் கிண்ணப் போட்டிக்கு ஈரான் தகுதி பெற்றுவிட்டது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ள உஸ்பெக்கிஸ்தான் கத்தாரை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ள தென்கொரியா குவைத்தை 4-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ள ஜோர்தான் ஈராக்கிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றபோதும் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.