கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் ஆசியாவில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்த குறைந்தபட்ச ஓட்டங்களாக இது அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இலங்கை 2-0 என்று தொடரை தன்வசப்படுத்தியது.
பேட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறும் ஆஸ்திரேலியாவுக்கு தற்போது பந்தடிப்பாளர்களும் ஓட்டங்கள் குவிக்காமல் திணறுகின்றனர்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியா தோல்வியடையும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.