ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதால் வார்னர் சில நாள்களுக்கு முன்னர் நாடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
காயத்தால் அவதிபட்டு வந்த முன்னணி வீரர்கள் மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது.
அண்மை காலமாக ஆஸ்திரேலிய அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக முக்கியமான தொடர்களில் பங்கேற்கமுடியவில்லை. அது அந்த அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான அணி விவரம்:
பாட் கம்மின்ஸ் (அணித் தலைவர்), சேன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கமரேன் கிரீன், டிரவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஸ், மார்னஸ் லபசேன்கே, மிட்சல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், அடம் ஸாம்பா.