ஆஸ்திரேலியாவுடன் மோதும் ஆப்கானிஸ்தான்

1 mins read
d8da9122-5368-457b-bfc7-66a80516b780
ஆஸ்திரேலியா ஏற்கெனவே பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்று உற்சாகத்தில் உள்ளது.  - படம்: ஏஎஃப்பி

கிங்ஸ்டன்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் உள்ள ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் சனிக்கிழமை (23 ஜூன்) காலை கிங்ஸ்டவுனில் மோதுகின்றன. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா ஏற்கெனவே பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்று உற்சாகத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அது வென்றால் கிட்டத்தட்ட அதன் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

மறுபக்கம் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது தோல்வியைத் தழுவினால் அரையிறுதிக்கு தகுதிபெறாது. அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்