தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம்: ரிஸ்வான்

1 mins read
e53e4d1b-3902-4555-9859-a84a37045b78
முகம்மது ரிஸ்வான். - படம்: ஊடகம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நவம்பர் 4ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிலும், 24ஆம் தேதியில் இருந்து ஜிம்பாப்வேயிலும் விளையாடவுள்ளது.

இரு நாடுகளிலும் பாகிஸ்தான் தலா மூன்று ஒருநாள், மூன்று டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி சில நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

நட்சத்திர வீரர் பாபர் அசாம் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து புதிய அணித் தலைவராக விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வான் (படம்) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் கடும் சிரமங்களை சந்தித்தது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த சுற்றுப்பயணங்களில் பாகிஸ்தான் அங்கு சரியாக விளையாடவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இம்முறை பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் போராடுவோம்,” என்று ரிஸ்வான் கூறினார்.

கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடியபோது பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைத் தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கின்றன. அதனை சரி செய்துள்ளோம். இதனால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்” என்று ரிஸ்வான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்