ஆஸ்திரேலியப் பொது விருது பரிசுத் தொகை $75 மில்லியனை எட்டியது

1 mins read
d2d1465a-613c-4acf-80dc-dca03d874d32
மெல்பர்ன் பார்க் அரங்கில் நடைபெறும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி. - படம்: ஆஸ்திரேலியப் பொது விருது

சிட்னி: இவ்வாண்டின் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை 1 விழுக்காடு அதிகரித்து 111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (S$74.88 மில்லியன்) எட்டியுள்ளது.

இப்போட்டியின் வரலாற்றில் இதுவே ஆக அதிகமான பரிசுத் தொகை என்று போட்டியின் ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) தெரிவித்தனர்.

“இந்தப் பரிசுத் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு நிலையிலும் உள்ள டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கைத் தொழிலை ஆதரிப்பதில் நாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுகிறது,” என்று டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேக் டைலி கூறினார்.

பரிசுத் தொகை அதிகரிப்பு டென்னிஸ் போட்டியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன் வளர்ச்சிக்குக் கைகொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டி ஆக அதிகப் பரிசுத் தொகையாக $90 மில்லியன் வழங்கியது.

விம்பிள்டன் $72.49 மில்லியனும் பிரெஞ்சுப் பொது விருது $66.12 மில்லியனும் வழங்கின.

குறிப்புச் சொற்கள்