பூப்பந்து: இறுதிச் சுற்றில் மலேசியா-தென்கொரியா மோதல்

1 mins read
639253e7-059b-4d3c-b446-6498127d6a5e
தாய்லாந்துப் பொது விருதுப் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஜப்பானைத் தோற்கடித்த மலேசியாவின் பெர்லி டான்- தீனா முரளிதரன் ஜோடி. - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: தாய்லாந்துப் பொது விருதுப் பூப்பந்துப் போட்டியில் மகளிருக்கான ஜோடிப் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு மலேசியாவும் தென்கொரியாவும் தகுதி பெற்றுள்ளன.

மலேசியா சார்பாக பெர்லி டானும் தீனா முரளிதரனும் விளையாடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெறும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் தென்கொரியாவின் நா யுன்-யோன் வூ ஜோடியுடன் அவர்கள் மோதுவர்.

சனிக்கிழமை (மே 17) நடைபெற்ற அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் 21-18, 21-12 எனும் புள்ளிக் கணக்கில் ஜப்பானிய ஜோடியை மலேசியா தோற்கடித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்