பாரிஸ்: கடந்த பருவத்திற்கான ஆகச் சிறந்தக் காற்பந்து வீரருக்கான ‘பலூன் டி ஓர்’ விருதை ஸ்பெயினின் ராட்ரி வென்றார்.
மான்செஸ்டர் சிட்டிக்கு விளையாடும் ராட்ரி ‘இது ஸ்பானியக் காற்பந்துக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறினார்.
இம்முறை ‘பலூன் டி ஓர்’ விருதை பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருதை ராட்ரி தட்டிச்சென்றார்.
மத்தியத் திடலில் விளையாடும் ராட்ரி கோல்கள் அடிப்பதிலும் தற்காப்பு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டார்.
முதல்முறையாக ‘பலூன் டி ஓர்’ விருதை வெல்லும் 28 வயது ராட்ரி கடந்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லிக் கிண்ணம், 2024 யூரோ கிண்ணம் உள்ளிட்ட பல கிண்ணங்களை வென்றார்.
‘பலூன் டி ஓர்’ விருதை பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இங்கிலிஷ் பிரிமியர் லிக் ஆட்டக்காரர் வென்றுள்ளார்.
21 வயதுக்கு கீழ் உள்ள ஆகச் சிறந்த விளையாட்டாளர் விருதை ஸ்பெயினின் 17 வயது லாமின் யமால் வென்றார். அவர் பார்சலோனாவுக்கு விளையாடி வருகிறார்.
‘பலூன் டி ஓர்’ விருதை ஆக அதிகமாக மெஸ்ஸி 8 முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.