கோலாலம்பூர்: அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) எழு மலேசிய வீரர்களுக்கு ஓராண்டுத் தடை விதித்துள்ளது.
அந்த வீரர்கள் காற்பந்து தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் ஃபிஃபா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஆசியக் கிண்ணக் காற்பந்துப்போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் மலேசியாவும் வியட்னாமும் மோதின.
அந்த ஆட்டத்தில் விளையாடிய மலேசிய வீரர்கள் தொடர்பான ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபா கண்டறிந்தது. அதைத்தொடர்ந்து ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.
டிபோர்ட்டிவோ ஆலவெஸ், கேப்ரியல் ஆரோச்சா, ரோட்ரிகோ ஹொல்காடோ, இமானுல் மச்சுக்கா, ஜுவாவ் ஃபிகரிடோ, ஜான் இரசபெல், ஹெக்டர் ஹெவெல் ஆகியோர் அந்த வீரர்கள்.
அந்த ஏழு வீரர்களும் எந்த அடிப்படையில் மலேசியாவைப் பிரதிநிதித்தனர் என்று ஃபிஃபா கேள்வி எழுப்பியுள்ளது.
வியட்னாமிற்கு எதிராக அந்த எழு வீரர்களும் விளையாடினர். அந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றிபெற்றது. மலேசியா அடுத்த மாதம் லாவோஸ் அணியுடன் இரண்டு ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
மலேசியக் காற்பந்துச் சங்கத்திற்கு 566,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த ஏழு வீரர்களுக்கும் 3250 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தண்டனையை எதிர்த்து மலேசியா மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை மலேசியக் காற்பந்து வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.