பாகிஸ்தானுக்கு எதிராக பங்ளாதே‌ஷ் திணறல்

பாகிஸ்தானுக்கு எதிராக பங்ளாதே‌ஷ் திணறல்

1 mins read
47dd6641-41aa-4b95-8320-55dad8e7f3fd
 பாகிஸ்தானின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய பங்ளாதே‌ஷ் - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ராவல்பிண்டி: பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் பந்தடித்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ஓட்டங்கள் குவித்து பந்தடிப்பை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.

சவுத் சகீல் 141 ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 171 ஓட்டங்களும் விளாசினார்கள்.

முதல் இன்னிங்சை தொடங்கிய பங்ளாதேசுக்கு ஷத்மான் இஸ்லாம் நல்ல துவக்கம் கொடுத்தார். அவர் 93 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த பந்தடிப்பாளர்கள் பாகிஸ்தானின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். மூன்றாவது நாள் ஆட்டத்தின் மாலை நிலவரப்படி பங்ளாதே‌ஷ் 4 விக்கெட்டுகள் இழந்து 206 ஓட்டங்கள் குவிந்திருந்தது.

குறிப்புச் சொற்கள்