தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிக் கனியைச் சுவைத்த பார்சிலோனா

1 mins read
85af67b8-57e7-4263-bd75-e367ae4f0ab9
பார்சிலோனாவின் மூன்றாவது கோலைப் போட்ட மார்கஸ் ஃரேஷ்ஃபர்ட். - படம்: ராய்ட்டர்ஸ்

பார்சிலோனா: ஸ்பானியக் காற்பந்து லீக் போட்டி ஆட்டத்தில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது பார்சிலோனா.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் எல்சே குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது.

பார்சிலோனாவுக்காக லமின் யமால், ஃபெரான் டோரெஸ், மார்கஸ் ரேஸ்ஃபர்ட் கோல்களைப் போட்டனர்.

இந்த வெற்றியின் மூலம், நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அது 25 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ரியால் மட்ரிட் பார்சிலோனாவைவிட கூடுதலாக ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் ரியால் மட்ரிட்டிடம் பார்சிலோனா 2-1 எனும் கோல் கணக்கில் தோற்றது.

குறிப்புச் சொற்கள்