உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
15 பேர் கொண்ட அந்த அணியில் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு அஜின்கியா ரகானே இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் மற்றும் உள்ளூர் ரஞ்சி தொடரில் சிறப்பாக ரகானே செயல்பட்டதால் அவருக்கு வாய்பளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்துகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதியாட்டம் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூலை 7 முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றமும் சில வாரங்களுக்கு முன் அதன் அணியை அறிவித்திருந்தது.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித் தலைவர்), ஷுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராத் ஹோலி, அஜின்கியா ரகானே, கே எல் ராகுல், கே எஸ் பரத், ரவிசந்தரன் அஸ்வின், ரவிந்தர ஜடேஜா, அக்சர் பட்டேல், சர்துல் தக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உணட்கட்
ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (அணித் தலைவர்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், மார்க்கஸ் ஹாரிஸ், ஜாஷ் ஹேசல்வுட், டிரவிஸ் ஹெட், ஜான் இங்லீஸ், உஸ்மன் கவாஜா, மார்னஸ் லபுசேங், நேத்தன் லைன், மிடசல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.