தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அறியப்படாத நாயகர்களுக்கு’ ரொக்கப் பரிசு அறிவித்த பிசிசிஐ

1 mins read
d61faef6-d818-4b1a-b98f-35adac4d4319
ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் கிரிக்கெட் அரங்கின் ஆடுகளத்தைச் சீரமைக்கும் பணியில் திடல் பராமரிப்பாளர்கள். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்ற விளையாட்டு அரங்குகளின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

சிறந்த ஆடுகளங்களை வழங்கிய அவர்களை ‘அறியப்படாத நாயகர்கள்’ என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா குறிப்பிட்டார்.

அதன்படி, மும்பை, டெல்லி, சென்னை, கோல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய வழக்கமான பத்துத் திடல்களின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இம்முறை கௌகாத்தி, விசாகப்பட்டினம், தர்மசாலா என மேலும் மூன்று அரங்குகளில் போட்டிகள் இடம்பெற்ற நிலையில், அவற்றின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

2024 ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுக்கப்பட்ட சாதனை இருமுறை முறியடிக்கப்பட்டது. எட்டு முறை 250 ஓட்டங்களுக்குமேல் எடுக்கப்பட்டது. இம்முறை மொத்தம் 1,260 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.

இறுதிப் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதாக வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்