மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாமீது போஜ்புரி மொழி நடிகை சப்னா கில் மும்பை விமான நிலையக் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
பிருத்வி ஷாமீதும் அவரின் நண்பர் ஆஷிஷ் யாதவ் மீதும் நடிகை சப்னா மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
பிருத்வி ஷாவும் அவரின் நண்பர்களும்தான் தங்களிடம் முதலில் பிரச்சினை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
சப்னாவின் தோழி, பிருத்வி ஷாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும் அதற்கு அவர் உடன்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு நடந்தது.
நடிகையின் நண்பர்கள், தங்களை அடித்ததாகவும் தங்களது வாகனத்தைச் சேதப்படுத்தியதாகவும் பிருத்வி ஷா தரப்பினர் .
அதே நேரத்தில், பிருத்வி ஷா, சப்னாவைத் தகாத முறையில் தொட்டதாகவும் அவரைத் தள்ளிவிட்டதாகவும் சப்னா தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

