தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் அணித்தலைவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

1 mins read
18ed3cb0-b6c3-410e-b257-0715a500c36a
கூட்டத்தில் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் கோல்கத்தா ஈடன் கார்டன் திடலில் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்குகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு 10 அணிகளின் தலைவர்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசனை நடத்துகிறது.

இதற்காக பத்து அணிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 20ஆம் தேதி மும்பையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதே போன்று 10 அணிகளின் உரிமையாளர்களின் மேலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு 10 அணிகளின் கேப்டன்கள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.

இந்தப் பருவத்தில் ஐந்து அணிகளுக்குப் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜிங்கிய ரகானே (கோல்கத்தா), ரஜத் பட்டிதார் (பெங்களூரு), ரிஷப் பந்த் (லக்னோ), ஷ்ரேயாஸ் ஐயர் (பஞ்சாப்), அக்சர் பட்டேல் (டெல்லி) ஆகியோரே ஐந்த ஐவர்

ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), கம்மின்ஸ் (ஹைதராபாத்), சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்), ஹார்திக் பாண்டியா (மும்பை), ஷுப்மன் கில் (குஜராத்) ஆகியோர் மற்ற ஐந்து அணிகளின் தலைவர்களாக நீடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்