தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்கிறது போர்ன்மத்தின் கோல் வேட்டை

1 mins read
6dda4388-4f94-470c-9827-c76f5027299e
நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ன்மத். - படம்: ராய்ட்டர்ஸ்

போர்ன்மத்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் கடந்த சில வாரங்களாக போர்ன்மத் மிகச் சிறப்பாக விளையாடிவரும் குழுக்களையும் ஊதித் தள்ளி வருகிறது.

அந்த வகையில் எதிர்பாரா விதமாகக் கொடிகட்டிப் பறந்த நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை 5-0 என போர்ன்மத் துவைத்தெடுத்தது. ஃபாரஸ்ட், இப்பருவத்தின் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. இத்தோல்விக்கு முன்பு அக்குழு லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தை வகித்தது.

இதேபோல், சென்ற வாரம் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் போர்ன்மத் திக்குமுக்காடச் செய்தது. அதற்கு முந்தைய ஆட்டங்களில் நியூகாசல் வென்றது மட்டுமன்றி கோல்களைக் குவித்து அதிக கோல்களை விட்டுக்கொடுக்காமல் இருந்தது.

சனிக்கிழமை (ஜனவரி 25) நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் இப்ஸ்விச் டவுனை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல். அண்மையில் சற்று தடுமாறிய லிவர்பூலுக்கு இந்த வெற்றி அபாரமானதாக அமைந்தது.

ஆர்சனல், உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 1-0 எனும் கோல் கணக்கில் பெரிதும் சிரமப்பட்டு வென்றது.

முற்பாதி ஆட்டத்தில் ஆர்சனலின் மைல்ஸ் லூயிஸ் ஸ்கெல்லி தப்பாட்டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். 70வது நிமிடத்தில் உல்வ்சின் ஜோவாவ் கோமெசும் நீக்கப்பட்டார்.

74வது நிமிடத்தில் ஆர்சனலின் ரிக்கார்டோ காலஃபியோரி வெற்றி கோலைப் போட்டார்.

செல்சியை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி.

குறிப்புச் சொற்கள்