பிரேசில் மீண்டும் மகுடம் சூடும்: கார்லோ அன்சிலோட்டி சூளுரை

பிரேசில் மீண்டும் மகுடம் சூடும்: கார்லோ அன்சிலோட்டி சூளுரை

1 mins read
cda2afd6-aa9f-4054-aea9-0bf51a23f0e2
இத்தாலியைச் சேர்ந்த நட்சத்திர நிர்வாகியான 65 வயது கார்லோ அன்சிலோட்டி, தேசியக் குழுவை வழிநடத்துவது இதுவே முதல்முறை. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ரியோ டி ஜெனிரோ: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் பிரேசிலை ஆறாவது முறையாக வெற்றி பெறச் செய்ய இருப்பதாக அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்சிலோட்டி சூளுரைத்துள்ளார்.

பிரேசில் இதுவரை ஐந்து முறை உலகக் கிண்ணத்தை ஏந்தியுள்ளது.

அண்மைய காலமாக அதன் செயல்பாடு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில், பிரேசிலின் பயிற்றுவிப்பாளராக ரியால் மட்ரிட்டின் முன்னாள் நிர்வாகி அன்சிலோட்டி பொறுப்பேற்றுள்ளார்.

அவர் கடந்த 60 ஆண்டுகளில் பிரேசிலின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்கும் முதல் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது தமக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்றார் அன்சிலோட்டி.

2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதே இலக்கு என்றார் அவர்.

இத்தாலியைச் சேர்ந்த நட்சத்திர நிர்வாகியான 65 வயது அன்சிலோட்டி, தேசியக் குழுவை வழிநடத்துவது இதுவே முதல்முறை.

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துக் கிண்ணத்தை ஐந்து முறை வென்ற நிர்வாகி எனும் பெருமை அவரைச் சேரும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்