இந்தூர்: இந்தியாவில் நடைபெற்ற 2025 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதின.
இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானாவின் சாதனையைத் தென்னாப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் முறியடித்தார்.
வெறும் 86 பந்துகளில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்சரைப் பறக்கவிட்டு சதம் அடித்தார் பிரிட்ஸ்.
இவ்வாண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவே பிரிட்ஸ் அடித்துள்ள ஐந்தாவது சதம்.
ஒரே ஆண்டில் ஆக அதிக சதம் அடித்த வீராங்கனை எனும் பெருமை அவரைச் சேரும்.
இதற்கு முன்பு இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா இப்பெருமைக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
2024ஆம் ஆண்டிலும் 2025ஆம் ஆண்டிலும் அவர் தலா நான்கு முறை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.