தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெஸ்ட் கிரிக்கெட்: பத்தாவது விக்கெட்டுக்குப் புதிய சாதனை

1 mins read
f44e7710-66cc-42dd-8efb-77f76ac3d051
ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட் - கேமரன் கிரீன் இணை. - படம்: ஏஎஃப்பி

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேமரன் கிரீனும் ஜோஷ் ஹேசல்வுட்டும் இணைந்து புதிய சாதனை படைத்தனர்.

இருவரும் சேர்ந்து பத்தாவது விக்கெட்டுக்கு 116 ஓட்டங்களைக் குவித்தனர். முன்னதாக, 2004ஆம் ஆண்டு ஜேசன் கில்லஸ்பியும் கிளென் மெக்ராத்தும் இணைந்து 114 ஓட்டங்களை எடுத்திருந்ததே ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தமட்டில் பத்தாவது விக்கெட்டுக்கான சாதனையாக இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியினர் பத்தாவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களுக்குமேல் குவித்தது இது ஆறாவது முறை.

முதல் இன்னிங்சில் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்களை விளாச, ஆஸ்திரேலிய அணி 383 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் 179 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 1) ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்களை எடுத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்