தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் லீக்: ரியால் மட்ரிட் போராடி வெற்றி

1 mins read
4d0cbaa0-e258-4e74-97a5-1db069c89611
அட்லெட்டிகோ மட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியால் மட்ரிட் அணி ‘பெனால்டி’ வாய்ப்புகள் மூலம் வெற்றிபெற்றது. - படம்: ராய்ட்டர்ஸ்

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ரியால் மட்ரிட் குழு போராடித் தகுதிபெற்றது.

அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ரியால் குழு ‘பெனால்டி’ வாய்ப்புகள் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் இரண்டு சுற்றுகளாக நடந்தது. மார்ச் 5ஆம் தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ரியால் குழு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 13) இரவு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அட்லெட்டிக்கோ குழு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதனால், மொத்த கோல் எண்ணிக்கை 2-2 என சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை முடிவுசெய்ய ‘பெனால்டி’ வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது.

அதில் ரியால் சிறப்பாகச் செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதிச் சுற்றில் ஆர்சனலுடன் அக்குழு மோதவிருக்கிறது.

மற்ற காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் முறையே பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லா, பயர்ன் மியூனிக் - இன்டர் மிலான், பார்சிலோனா - பொருஸியா டோர்ட்மண்ட் குழுக்கள் பொருதவுள்ளன.

காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் ஏப்ரல் 9, 10, 16, 17ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்