தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் அரை நிர்வாணமாகப் பயணம் செய்த விளையாட்டு வீரர்கள்

1 mins read
8f454de5-925d-40cd-9941-56c2586e30da
விமானத்திற்குள் சூடு அதிகமாக இருந்ததால் விளையாட்டு வீரர்கள் அவர்களின் மேலாடைகளைக் கழற்றி வெப்பத்திலிருந்து காத்துக்கொண்டனர். - படம்: சமூக ஊடகம்

பிரெஞ்சு காற்பந்து அணியான ஏஎஸ் மொனாக்கோ (AS Monaco) அணியின் வீரர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது.

அவர்கள் பயணம் செய்த விமானத்தில் குளுரூட்டி வேலை செய்யாமல் போனது. புழுக்கம் தாங்க முடியாமல் விளையாட்டு வீரர்கள் உள்ளாடைகளை அணிந்த நிலையில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அதுதொடர்பான காணொளிகளும் படங்களும் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

பெல்ஜியத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) மாலை நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கிண்ண ஆட்டத்தில் பங்குபெற ஏஎஸ் மொனாக்கோ வீரர்கள் புதன்கிழமை பயணம் மேற்கொண்டபோது இச்சம்பவம் ஏற்பட்டது.

விமானம் பறக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனால் குளுரூட்டி வேலை செய்யவில்லை. அதன்பின்னர் விமானம் தரையிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், விமானத்திற்குள் சூடு அதிகமாக இருந்ததால் விளையாட்டு வீரர்கள் தங்களது மேலாடைகளைக் கழற்றி வெப்பத்திலிருந்து காத்துக்கொண்டனர்.

விளையாட்டு வீரர்கள் நீச்சல் குளத்திலிருந்து வருவது போல் விமானத்திலிருந்து அரை நிர்வாணமாக வெளியேறினர்.

ஏஎஸ் மொனாக்கோ வியாழக்கிழமை காலைப் பெல்ஜியம் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்