இங்கிலீஷ் பிரிமியர் லீக் கோப்பைக்காக நாங்களும் போட்டியிடுகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் நார்விச் சிட்டி குழுவை சின்னபின்னமாக்கி பட்டியலின் அடிமட்டத்திற்குத் தள்ளியது செல்சி அணி.
செல்சியின் சொந்த அரங்கில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணி வென்று பட்டியலின் உச்சத்தில் தம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
இவ்வாட்டத்தில் செல்சியின் இங்கிலாந்து நட்சத்திரம் மேசன் மௌண்ட் மூன்று கோல்களை புகுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே, மூன்று கோல்களை புகுத்திவிட்டது செல்சி.
நார்விச் சிட்டி தற்காப்பு ஆட்டக்காரர் ஆட்டத்தின் 65 நிமிடத்தில் சிவப்பு அட்டையைப் பெற, பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது அக்குழு.
இதுவரையில், பருவம் தொடங்கி, ஆடிய முதல் 9 ஆட்டங்களில் எதிலும் வெற்றி பெறாமல் 2 புள்ளிகளுடன் பட்டியலின் அடிமட்டத்தில் தொடர்ந்து தவிக்கிறது நார்விச் சிட்டி.
லீக் நடப்பு வெற்றியாளர்களான மான்செஸ்டர் சிட்டியும் நேற்று வெற்றிக் கனியை சுவைத்தது.
எதிரணி விளையாட்டு அரங்கில் பிராய்ட்டன் குழுவை சந்தித்த மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று, லீக் பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
வளர்ந்துவரும் இங்கிலாந்து நட்சத்திரம் பில் ஃபோடன் இரண்டு கோல்களை புகுத்தி செல்சி அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.
இன்றிரவு (அக்டோபர் 24ஆம் தேதி) லீக் மகுடத்திற்கு போட்டியிடும் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட் அணியும் லிவர்பூல் அணியும் போட்டியிடுகின்றன.

