மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 38வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) இரவு 10 மணிக்கு மும்பையில் நடக்கிறது.
மும்பை தொடர்ந்து இரு ஆட்டங்களில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் சென்னையைச் சந்திக்கிறது.
இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது. அதனால் இந்த ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மும்பைக்கு எதிராகத் தோற்றால் அதன் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும். அதனால் சென்னை அணி தனது முழுபலத்தை வெளிக்காட்டலாம்.

