தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயிற்சியைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

1 mins read
ac8d2ed3-3ff0-4406-9487-708c1708d203
நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி புதன்கிழமை சென்னைக்குச் சென்றார். - படம்: ஐஏஎன்எஸ்

சென்னை: இப்பருவத்திற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அரங்கத்தில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்தப் பருவத்திற்குத் தயாராகும் விதமாக சென்னை அணி வீரர்கள் 10 நாள்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் உயர்மட்ட செயல்திறன் நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியதாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி புதன்கிழமை (பிப்ரவரி 26) சென்னை சென்றார்.

விமான நிலையத்தில் இருந்து அவர், வெளியே வரும் புகைப்படத்தை சென்னை அணி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த பருவத்தில் கிண்ணத்தை வெல்லத் தவறிய சென்னை அணி இம்முறை கடுமையாக விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்