இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் பதவி விலகினார்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் பதவி விலகினார்

1 mins read
57b90ef4-1bf0-46a4-b12a-2da9cc274108
படம்: பிசிசிஐ -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இன்று (பிப்ரவரி 17) பதவி விலகியுள்ளார்.

அவர் பதவிவிலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சியிடம் இந்திய அணியின் நிர்வாகம் குறித்து சர்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.

அணியின் உள்விவகாரங்கள் குறித்து சேத்தன் சர்மா பேசியது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

முன்னணி விளையாட்டாளர்களின் உடல் தகுதி குறித்தும் வீரர்களின் விருப்பு வெறுப்பு பற்றியும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.