சிட்டி ஏமாற்றம்; லிவர்பூல் குதூகலம்

1 mins read
fcb17f13-22f4-47a5-80c8-0ebfec96d19a
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக பிரைட்டனின் வெற்றி கோலைப் போட்ட மேட் ஓ ரைலி (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக அதன் நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

இத்தகைய ஒரு நிலை அதன் நிர்வாகி பெப் கார்டியோலாவுக்கு நேர்ந்திருப்பது இதுவே முதல்முறை.

நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டன் குழுவிடம் அது 2-1 எனும் கோல் கணக்கில் தோற்றது.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹார்லண்ட் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

ஆனால் ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் பிரைட்டன் இரண்டு கோல்கள் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் பிரைட்டன் 19 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சிட்டி, 23 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியது.

லிவர்பூலுக்காக டார்வின் நுநேசும் முகம்மது சாலாவும் கோல்கள் போட்டனர்.

லீக் பட்டியலில் லிவர்பூல், 28 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

தோல்வி அடைந்த வில்லா 18 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்