வெற்றிச் சுவையை மறந்த சிட்டி; உயரப் பறந்த லிவர்பூல்

1 mins read
8e094af6-8df2-4738-8ea0-f7618867ed7a
லிவர்பூலுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை முகம்மது சாலா கோலாக்கி தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். - படம்: இபிஏ

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்டு விளையாட்டரங்கில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது.

ஏற்கெனவே, தொடர் தோல்விகளால் சிட்டி தடுமாறி வருகிறது.

அக்டோபர் 26ஆம் தேதியிலிருந்து இதுவரை சிட்டி ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.

அண்மையில், சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஃபயர்னூர்ட் குழுவுடன் சிட்டி மோதியது.

ஒரு கட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் சிட்டி முன்னிலை வகித்தது.

ஆனால் கடைசி 15 நிமிடங்களில் ஃபயர்னூர்ட் மூன்று கோல்களைப் போட்டது.

அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல சிட்டியை லிவர்பூல் வீழ்த்தியது.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் லிவர்பூலின் கேக்போ கோல் போட்டு தமது அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

லிவர்பூலுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை முகம்மது சாலா கோலாக்கி தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றியின் பாதையிலிருந்து விலகிச் சென்றிருக்கும் சிட்டி , 23 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

லிவர்பூல் குழு, 34 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்