மகுடத்தை நோக்கி வெற்றிநடை போடும் சிட்டி

இங்கிலி‌ஷ் காற்பந்து லீக் பருவத்தில் பல முன்னணி குழுக்கள் தொடந்து ஏற்றதாழ்வுகளை சந்திந்து வர, தொடர் வெற்றிகளை குவித்து முதலிடத்தில் தமது முன்னணியை வலுவாக்கி உள்ளது மான்செஸ்டர் சிட்டி காற்பந்து குழு.

அது இன்று அதிகாலையில் நடந்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் குழுவை வீழ்த்தியது.

இந்த வெற்றியுடன் மான்செஸ்டர் சிட்டி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் லீக் பட்டியலின் உச்சத்தில் இடம்பெறுகிறது.

ரியாட் மாரெஸ், பில் ஃபோடன், பர்னாடோ சில்வா ஆகியோர் மூன்று கோல்களை புகுத்தி எவர்ட்டன் குழுவை மூட்டை கட்டினர்.

எவர்ட்டன் ஒரே கோலை அதன் முன்னணி ஆட்டக்காரரான ரிச்சாலிசன் புகுத்தினார்.

இந்த தோல்வியை தொடர்ந்து எவர்ட்டன் பட்டியலில் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த லீக் பருவத்தில் லீக் மகுடத்தை லிவர்பூல் அணியிடம் இழந்தது மான்செஸ்டர் சிட்டி.

ஞாயிறு அன்று வரும் அடுத்த லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ஆர்சனல் குழுவை சந்திக்கவுள்ளது.

வரும் சனிக்கிழமை, எவர்ட்டன் குழு லீக்கின் நடப்பு வெற்றியாளர்களான லிவர்பூல் அணியுடன் பொருதும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!