மோண்டிவீடியோ: கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் கிடைத்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நடந்த 2026 உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது கொலம்பியா.
காயம் காரணமாக நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி இல்லாமல் களமிறங்கிய உலகக் கிண்ண வெற்றியாளர் அர்ஜெண்டினாவை போராடி வென்றது கொலம்பியா.
தோல்வியுற்றாலும் 2026 உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பிடிக்கும் பயணத்தில் முன்னேறி செல்கிறது அர்ஜெண்டினா.
மற்றோர் உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்று பிரேசிலுக்கு அதிர்ச்சி தோல்வி தந்தது பாராகுவே அணி.