கடைசி நிமிடத்தில் கோலடித்து போர்ச்சுகல் வெற்றி

1 mins read
b22e1160-6f9b-4a69-85da-b757aa207015
ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் பிரான்சிஸ்கோ கான்செய்சோ சிறப்பாக கோல் அடித்து போர்ச்சுகலை வெற்றிபெற செய்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லின்: ஜெர்மனியில் தற்போது யூரோ 24 காற்பந்து போட்டி நடந்து வருகிறது. ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் அணியும், செக்குடியரசு அணியும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின் மோதின.

அதில் போர்ச்சுகல் அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் செக்குடியரசு அணி முதல் கோலை போட்டது. இருப்பினும் 69வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு முதல் கோல் கிடைத்தது. அதன்பிறகு ஆட்டம் பரபரப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிக்கப் போராடின.

இந்நிலையில் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் 21 வயது பிரான்சிஸ்கோ கான்செய்சோ அருமையாக ஒரு கோலை அடித்து போர்ச்சுகலை வெற்றிபெற செய்தார்.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார். இதன் மூலம் அவர் ஆறாவது முறையாக யூரோ கிண்ணத்தில் விளையாடிய சாதனை படைத்தார். இருப்பினும் 39 வயது ரொனால்டோ முன்னைப் போல் வேகமாக விளையாடுவதில்லை என்று குறைகூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்