52 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் காங்கோ

52 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் காங்கோ

2 mins read
சுகாதார, பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு ஆளான காங்கோ
4c90aebf-d372-48be-a96f-e6ca10c5ef78
உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற காங்கோ குழு அதனைக் கொண்டாடுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜோஹன்னஸ்பர்க்: சுகாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளால் தத்தளிக்கும் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு, 52 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கிறது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கொடிய இபோலா நோய்த் தாக்குதலில், மே 24ஆம் தேதி நிலவரப்படி 10 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 223 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. சில காலமாக யாருக்கும் தெரியாமல் பரவி வந்ததாகக் கருதப்படும் இந்த நோய்த்தொற்றின் உண்மையான பரவல், இதைவிட மிகவும் பரந்ததாக இருக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நல்லவேளையாக, அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் காங்கோவுக்கு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 நட்சத்திர வீரர்களில் எவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரவில்லை.

பிரெஞ்சு பயிற்றுவிப்பாளர் செபாஸ்டியன் டெசாப்ரே, 11 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்துள்ளார். அவர்களில் ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள ஒரு காற்பந்துக் குழுவுக்காகவும் மற்றொருவர் எகிப்திய குழுவான பிரமிட்சுக்கும் விளையாடுகின்றனர்.

‘சிறுத்தைகள்’ என்று அழைக்கப்படும் தேசிய காற்பந்து அணி, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ‘கே’ பிரிவில் மோதும்.

“உலகக் கிண்ணப் போட்டிகளுக்குச் செல்வது என்பது, காங்கோ மக்களின் ஒரு தலைமுறை முதன்முறையாகத் தங்கள் நாயகர்கள் மாபெரும் காற்பந்துப் போட்டியில் போட்டியிடுவதைக் காண்பார்கள் என்பதாகும்.

“நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில், இது மக்களின் மனநிலையை நிச்சயம் மேம்படுத்தும். தங்களால் ஆற்றக்கூடிய நேர்மறையான பங்கைப் பற்றி என் வீரர்கள் அறிந்திருக்கிறார்கள்,” என்றார் பயிற்றுவிப்பாளர் டெசாப்ரே.

குறிப்புச் சொற்கள்
பயிற்றுவிப்பாளர்காற்பந்துரொனால்டோ