நியூயார்க்: அமெரிக்க கண்டங்களில் நடக்கும் ஆண்களுக்கான கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் முதல் முறையாக பெண் நடுவர்கள் களமிறங்குகின்றனர். ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 101 நடுவர்கள் பங்கேற்கின்றனர். அதில் 8 பேர் பெண்கள்.
இரண்டு பெண் நடுவர்கள் விளையாட்டாளர்கள் விளையாடும் போது களத்தில் இருப்பார்கள். ஒருவர் காணொளி உதவி நடுவராக இருப்பார். மற்ற ஐந்து பெண்களும் களத்தில் உதவி நடுவர்களாக செயல்படுவார்கள்.
பெண்களுக்கு காற்பந்து நடுவர்கள் பணியிலும் போதிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் இம்முடிவை எடுத்ததாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

