காற்பந்து: அமெரிக்கா வெளியேற்றம்

1 mins read
48a0ea63-7d13-4f56-a870-2895eca784e7
ஆட்டத்தில் தோற்றதால் சோகத்தில் ஆழ்ந்த அமெரிக்க வீரர் கிறிஸ் ரிச்சர்ட்சைத் தேற்ற முயல்கிறார் உருகுவே வீரர் ஃபெடரிக்கோ வல்வர்டே. - படம்: ராய்ட்டர்ஸ்

கேன்சஸ் சிட்டி: கோப்பா அமெரிக்கா காற்பந்துக் கிண்ணத் தொடரை ஏற்று நடத்திவரும் அமெரிக்காவால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.

‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி, சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காலை நடந்த ஆட்டத்தில் உருகுவேயிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது.

மூன்று ஆட்டங்களிலும் வென்ற உருகுவேயும் இரண்டு ஆட்டங்களில் வென்ற பனாமாவும் ‘சி’ பிரிவிலிருந்து காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன.

ஓர் ஆட்டத்தில் மட்டும் வென்ற அமெரிக்கா தனது பிரிவில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.

இதனையடுத்து, அமெரிக்க அணியின் பயிற்றுநர் கிரெக் பெர்ஹால்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உருகுவேயுடனான ஆட்டத்தின் பிற்பாதியிலும் ஆட்டம் முடிந்த பின்னரும் ‘கிரெக்கை நீக்க வேண்டும்’ என ரசிகர்கள் முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

“இதனைவிடச் சிறப்பாக எங்களால் விளையாட முடியும் என்பதை அறிவோம். ஆயினும், இத்தொடரில் அதனை நாங்கள் செய்துகாட்டவில்லை,” என்றார் பெர்ஹால்டர்.

‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இன்னோர் அணியான பொலிவியா மூன்று ஆட்டங்களிலும் தோல்விகண்டது. செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் அவ்வணியை 3-1 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்தது பனாமா.

குறிப்புச் சொற்கள்