துபாய்: சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையாக 3 மில்லியன் வெள்ளி வழங்கப்படும் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் தெரிவித்துள்ளது.
இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வெல்லத் தவறும் அணிக்கு 1.5 மில்லியன் வெள்ளி கிடைக்கும். அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 750,000 வெள்ளி வழங்கப்படும்.
இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி கிண்ணத்தைவிட தற்போது வழங்கும் பரிசுத் தொகை மதிப்பு 53 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இம்முறை பரிசுத்தொகையாக மொத்தம் 9.25 மில்லியன் வெள்ளி வழங்கப்படுகிறது.
50 ஓவர் போட்டியாக நடிக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஆட்டங்கள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் கிண்ணத்திற்கு போட்டியிடுகின்றன.