மும்பை: இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்தது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா பந்தடித்தது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சரணடைந்தது.
அபிஷேக் சர்மா ‘பவர்பிளே’ ஓவர்களான முதல் 6 ஓவர்களில் மட்டும் தனி ஆளாக 21 பந்துகளில் 58 ஓட்டங்கள் அடித்தார்.
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ஓட்டங்கள் குவித்தார். அவர் 13 சிக்சர்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது.
இமாலய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டநாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கும் தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கும் வழங்கப்பட்டது.