சென்னை: ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது. கடந்த ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தட்டிச் சென்றது.
இப்பருவத்தில் சென்னை அணி அதன் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வென்றது. அதேபோல் கோல்கத்தா அணியை பெங்களூரு அணி எளிதாக வீழ்த்தியது. அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கலாம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

