ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
நான்காவது போட்டி இம்மாதம் 23ஆம் தேதியன்று ராஞ்சியில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், அப்போட்டியில் பும்ரா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால் நான்காவது போட்டியிலும் கே.எல். ராகுல் விளையாடமாட்டார் எனச் சொல்லப்படுகிறது.
பும்ரா இல்லாத நிலையில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

