கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

1 mins read
8cb6c041-a088-4708-be06-b646c8342840
வா‌ஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். - படம்: இபிஏ

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

நான்காவது ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இந்தியாவுக்கு அபி‌ஷேக் சர்மா மற்றும் ‌ஷுப்மன் கில் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அபி‌ஷேக் 28 ஓட்டங்களும் கில் 46 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நன்றாக விளையாடினாலும் பெரிய ஓட்டங்களைக் குவிக்கத் தவறினர்.

20வது ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. நாதன் எலிஸ், ஏடம் சாம்பா தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா முதல் பத்து ஓவர்களில் சிறப்பாக விளையாடியது. 77 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து வெற்றியை நோக்கி நகர்ந்தது.

இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டது.

இறுதியில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வா‌ஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்சர் பட்டேல் மற்றும் சிவம் துபே தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடரின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை (நவம்பர் 8) மாலை நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்