கோல்கத்தா: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கியது.
முதல் ஆட்டம் கோல்கத்தாவில் நடக்கிறது. பூவா தலையாவில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது.
முதல் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா நிதானமாக ஆடியது. இருப்பினும் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மார்க்ரம் அதிகபட்சமாக 31 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்கா சுருண்டது.
பும்ரா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முகம்மது சிராஜும் குல்தீப் யாதவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா விழிப்புடன் விளையாடியது. இருப்பினும் ஜெய்ஸ்வால் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கே எல் ராகுல் 13 ஓட்டங்களுடனும் வாஷிங்டன் சுந்தர் ஆறு ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது நாள் ஆட்டத்திலும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய வீரர்கள் கவனமாக விளையாடக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

