கிரிக்கெட்: மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணித்தலைவர்

1 mins read
9ea1d8d6-61ca-4fa1-b267-9496a7082556
நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது. - படம்: இபிஏ

கராச்சி: பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது.

இந்நிலையில், நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் சான்ட்னெர் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

“இத்தொடரில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அது அணியை பலமான அணியாக காட்டுகிறது,” என்று சான்ட்னெர் தெரிவித்தார்.

மறுபக்கம் பாகிஸ்தான் சொந்த மண்ணில் தொடரை இழந்த சோகத்தில் உள்ளது.

இம்மாதம் 19ஆம் தேதி முதல் 50 ஓவர் போட்டியாக நடக்க இருக்கும்சாம்பியன்ஸ் டிராஃபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

அதனால் இத்தொடரை நல்ல பயிற்சியாக பாகிஸ்தான் பயன்படுத்த எண்ணியது. ஆனால் பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது.

மேலும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் முதல் ஆட்டத்திலும் பாகிஸ்தான் நியூசிலாந்துடன் மோதுகிறது. இதனால் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் வெற்றி ஓட்டத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் சாம்பியன்ஸ் டிராஃபியில் போட்டியிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்