பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சர்பராஸ் கான் சதம் விளாசினார். அவருக்கு துணையாக நின்று விளையாடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.
இருவரும் நான்காவது நாள் ஆட்டத்தை எளிதாக சமாளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆட்டம் நியூசிலாந்தின் பக்கம் சென்றது.
சர்பராஸ் 150 ஓட்டங்களிலும் பண்ட் 99 ஓட்டங்களிலும் வெளியேறினர். அதன்பின்னர் வந்த பந்தடிப்பாளர்கள் ஓட்டங்கள் குவிக்க முடியாமல் திணறினர்.
இறுதியில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்கள் எடுத்தது.
மேட் ஹென்றி, வில்லியம் ஓரோக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதே நேரம் நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 402 ஓட்டங்கள் குவித்தது.
இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 462 ஓட்டங்கள் எடுத்தும் நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 107 ஓட்டங்கள் மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், நியூசிலாந்து அதிரடியாக ஆடக்கூடும். எளிதான இலக்கு என்பதால் நியூசிலாந்து ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.