மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியின் நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவை சிறப்பாக சமாளித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் நிதிஷ்.
ஆட்டத்தின் முதல் நாளில் (டிசம்பர் 26) அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா 300க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்தது. இரண்டாவது நாளில் (டிசம்பர் 27) ஸ்டீவன் ஸ்மித் சதமடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் (டிசம்பர் 28) பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்க வேண்டியக் கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
ரிஷப் பண்ட் 28 ஓட்டங்களிலும் ரவீந்தர ஜடேஜா 17 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அதன்பின்னர் இணைந்த நிதிஷ்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி அபாரமாக விளையாடி 127 ஓட்டங்கள் குவித்தது. சுந்தர் 50 ஓட்டங்களில் வெளியேறினார். இருப்பினும் மனம்தளராத நிதிஷ் தமது முதல் டெஸ்ட் சதத்தை விளாசி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டார்.
மூன்றாவது நாள் முடிவில் இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்தது. நிதிஷ் 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா இன்னும் 116 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.