தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் முகம்மது ஆமிர்

1 mins read
aa2c6698-8f22-4493-8fe3-1f458b27241a
பந்துவீச்சாளர் முகம்மது ஆமிர் - படம்: ராய்ட்டர்ஸ்

லாகூர்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது ஆமிர் அனைத்துலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான அமிர் பாகிஸ்தானுக்காக 36 டெஸ்ட், 62 டி20, 61 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானுக்கு களமிறங்கிய அமிர் மொத்தம் 271 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் 16 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இதற்கு முன்னர் ஆமிர், 2021ஆம் ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் இவ்வாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக தமது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்.

குறிப்புச் சொற்கள்