தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

1 mins read
9cf02c9d-3f0f-4f97-a44a-d3e620781298
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது அமீர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது வீரர், 31, மூவாண்டுகளுக்குப் பிறகு திடீரென தமது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

பந்தடிப்பாளர்களுக்கு மிரட்டலாகத் திகழ்ந்துவந்த அமீர், கடந்த 2020 டிசம்பர் மாதம் அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்கீழ் தம்மால் விளையாட முடியாது என்றும் தனக்கு மனவுளைச்சல் தருகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன்பின் உலகின் பல டி20 லீக் போட்டிகளிலும் விளையாடி வந்த அமீர், தமது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஊடகப் பக்கத்தில், “இன்னும் பாகிஸ்தானுக்கு விளையாடுவதாக கனவு காண்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட அமீர் குறிவைத்துள்ளார்.

‘ஸ்பாட் ஃபிக்சிங்’ வகை சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கடந்த 2011ஆம் ஆண்டு இவர் மூன்று மாதங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அவருக்கு ஐந்தாண்டுத் தடையும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்