அணிக்குத் திரும்புகிறார் ரோகித் சர்மா!

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறார்.

அதனால், முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய இஷான் கிஷனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

ரோகித் இல்லாத நிலையில் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தினார். அப்போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் மளமளவென்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

ஆனாலும், கேஎல் ராகுல் (75*), பாண்டியா (25), ஜடேஜா (45*) ஆகியோர் பொறுப்புடன் ஆட, இந்திய அணி 61 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆட்டத்தை வென்றது. 

கடைசி, மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் நடக்கவிருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!