தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவூதி தேசிய நாள் கொண்டாடிய ரொனால்டோ

1 mins read
604f49ca-f540-4b67-a51a-673c1ae25146
சவூதி அரேபியாவின் பாரம்பரிய உடையணிந்து, வாளேந்தி நிற்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. - படம்: அல் நசர் காற்பந்துக் குழு

ரியாத்: சவூதி அரேபியாவில் செப்டம்பர் 23 சனிக்கிழமை தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, சவூதி விளையாட்டுக் குழுக்களும் பல நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்து அச்சிறப்புமிக்க நாளைக் கொண்டாடி வருகின்றன.

அவை தங்களது வெளிநாட்டு விளையாட்டாளர்களுக்குச் சவூதியின் கலாசாரத்தையும் வரலாற்றையும் எடுத்துரைத்து, அவர்களையும் தங்களது கொண்டாட்டங்களில் பங்கெடுக்கச் செய்கின்றன.

அவ்வகையில், அல் நசர் காற்பந்துக் குழுவும் தனது நட்சத்திர ஆட்டக்காரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து சவூதி நாளைக் கொண்டாடியது.

ரொனால்டோ சவூதி பாரம்பரிய உடையில் அந்நாட்டின் தேசிய நாளைக் கொண்டாடிய காணொளியையும் அல் நசர் குழு தனது ‘எக்ஸ்’ (டுவிட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

செனகல் ஆட்டக்காரர் சாடியோ மானே உள்ளிட்ட வீரர்களும் இணைந்து சவூதி தேசிய நாளைக் கொண்டாடியதை அக்காணொளி காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்