தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ

1 mins read
ecbd7a96-570c-4b33-8fae-8f213785271e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூன் மாதம் சிங்கப்பூர் வருகிறார்.

இதற்கு முன்னர் சில முறை சிங்கப்பூர் வந்துள்ள 38 வயது ரொனால்டோ இம்முறை ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் இங்கு வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரொனால்டோ சிங்கப்பூர் ஒலிம்பிக் அறநிறுவனத்தின் பீட்டர் லிம் உபகாரச் சம்பளத்தை பெறுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இங்கு வருகிறார்.

இந்த உபகாரச் சம்பளம் 2010ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் ஒலிம்பிக் அறநிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம் வழங்குகிறார்.

ரொனால்டோவுடன் நெருக்கமாக உள்ளவர்களில் பீட்டர் லிம்மும் ஒருவர். அவர் ஸ்பெயினின் லா லீ கா கிண்ணத்தில் விளையாடும் வேலன்சியா அணியின் உரிமையாளரும் கூட.

சிங்கப்பூர் வருவதை ரொனால்டோ சமூக ஊடகங்கள் வழியாகவும் உறுதிப்படுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்