தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவரைப் பார்க்கவுள்ள டோனி

1 mins read
99f96cf3-e9d4-4a54-ad8f-c087a374cef4
படம்: டுவிட்டர்/பிசிசிஐ -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி தமது கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக எலும்பு மருத்துவரைப் பார்க்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

முட்டியில் காயமிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் ஐபிஎல் தொடரில் டோனி விளையாடி அணியை வழிநடத்தினார்.

தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவரை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயத்திற்கு அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றால் அது குறித்த முடிவை டோனி தான் எடுப்பார் என்று காசி விஸ்வநாத் கூறினார்.

உடல் ஒத்துழைத்தால் அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவேன் என்று டோனி ஐபிஎல் கிண்ணத்தை வென்ற பிறகு கூறியிருந்தார்.

சென்னை அணி ஐந்தாவது முறையாக கிண்ணத்தை வென்றது. இருப்பினும் அந்த அணி எந்த கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக சென்னை அணிக்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈர்ப்பு இல்லை என்று காசி விஸ்வநாத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்