இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் 16வது தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதற்காக அணிகள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களத்தில் இறங்கியுள்ளது. பயிற்சி நேரம் போக, அணியின் விளம்பரங்களுக்காகவும் கிரிக்கெட் வீரர்கள் நடித்து வருகின்றனர்.
அப்படி ஒரு விளம்பரத்திற்கு நடித்தபோது, நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படப் பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி, சிவம் துபே, தீபக் சகார், ருத்துராஜ் ஆகியோர் ஆடுவதைக் காட்டும் ஒரு காணொளியை அவ்வணி சமூக ஊடகத்தில் வெளியிட்டது.
அதைக் கண்ட இணையவாசிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள அந்தக் காணொளி 550,000க்கும் அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.