தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஎஸ்கே அணி தோல்வி: 'லியோ' நடிகை சோகம்

1 mins read
7d5506c4-0548-4465-bb18-3f62dce693ae
அரங்கில் இருந்த பெரிய திரைகளில் இவர்களைப் பார்த்தபோதெல்லாம் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். படம்: சமூக ஊடகம் -
multi-img1 of 2

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள், பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னையில் நடைபெற்றது.

அதைக் காண திரையுலகப் பிரபலங்களான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, மேகா ஆகாஷ், நகைச்சுவை நடிகர் சதீஷும் தமிழ்நாடு இளையர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தனர்.

அரங்கில் இருந்த பெரிய திரைகளில் அவர்களைப் பார்த்தபோதெல்லாம் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

எனினும், இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிவரை போராடி தோல்வி கண்டதால் திரிஷா சோகம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சிஎஸ்கே பந்தடித்தபோது அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி 'சிக்சர்'களை விளாசியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மூன்று ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.